Health Tips:தினமும் வெஜிடபிள் ஜூஸ் குடிப்பது நல்லதா?கவனிக்க வேண்டியவை என்ன?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில காய்கறிகளை ஜூஸ் செய்து குடிப்பர். அப்படியிருக்கையில் கவனிக்க வேண்டிய விசயங்களாக நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாய்கறிகளை ஜூஸ் செய்யும்போது சிலவற்றை அப்படியே குடிக்க கூடாது. அதை பாதி வேக வைத்து ஜூஸ் செய்யலாம். அதோடு, அதிலுள்ள ஃபைபர் மிக்ஸியில் அரைக்கும்போது அது முழுமையாக உடலுக்கு கிடைக்காது என்று தெரிவிக்கிறார்கள். குறிப்பாக கீரை சேர்த்து ஸ்மூத்தி செய்யும்போது அதை வேக வைத்து சேர்க்க வேண்டும். கீரையை பச்சையாக சாப்பிட கூடாது. அது செரிமான ஆக நேரம் எடுக்கும். குடல்களில் உள்ள என்சைம்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
கீரையை வேகவைக்காமல் ஜூஸ் செய்து குடிப்பது அதிலுள்ள ஆக்ஸலேட் குடல், கணையம் உள்ளிட்டவற்றில் எரிச்சை ஏற்படுத்தலாம்.
பழங்கள், காய்கறிகள் இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்யவே கூடாது. இரண்டிலும் உள்ள என்சைம்கள் தனித்தனி பலனை தரக் கூடியவை.
காய்கறிகளை வேகவைத்து மசித்து சாப்பிடலாம். இல்லையெனில் ட்ர் மோட்டில் ப்ளண்ட் செய்வது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -