Tomato Ketchup:சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் - இதோ ரெசிபி!
தக்காளி சாஸ்/ கெட்சப் பிடிக்கும் என்பவர்கள் அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். தக்காளியை நன்கு கழுவி துண்டுகளாக நறுக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடாயில் தண்ணீர் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, முழு மிளகு, நறுக்கிய தக்காளி போடவும். கடாயை மூடி, 30 நிமிடம் வேகவிடவும்.
தக்காளி நன்கு வெந்ததும், இதை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அரைத்த தக்காளி விழுதை வடிகட்டவும்.
இன்னொரு கடாயில், வடிகட்டிய தக்காளி விழுது ஊற்றி, கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து, இதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
தக்காளி கெட்சப்'பின் சுவையை சரி பார்க்கவும். இறுதியாக இதில் வினிகர் சேர்த்து கிளறவும். வினிகர் தேவையில்லை எனில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களுக்கு வேண்டும் என்றால் வினிகர் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
கெட்சப்'பின் ஈரம் நீங்கி, கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்து அதன் தன்மை மாறும்வரை காத்திருக்கவும். அது தெரியும்.நன்கு ஆறியபின், இதில் கண்ணாடி ஜாடியில் போட்டு பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -