Healthy Tips:தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவைகள் காரணமாக சிலருக்கு உடல் பருமன், ஹார்மோன் சீரின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, சரிவிகித உணவு என வாழ்க்கை முறை இருந்தாலே ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும்.
தினமும் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
போதுமான அளவு தூங்கினாலும் சோர்வாகவோ, உடலில் எனர்ஜி இல்லை என்றோ உணர்ந்தால் அவசியம் சிறிதளவிலான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், அளவோடு உணவுகளை சாப்பிடாலும் உடல் எடை அதிகரித்திருக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
உடல் எடை அதிகரிப்பினால் மூட்டு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ரொம்ப காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலில் ஃப்ளக்ஸிபிளிட்டி இருக்காது.
சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பாக இருக்கவும் மிகவும் அவசியமானதாகும். தினமும் வாக்கிங், ஜாகிங் செய்வதை பழக்கமாக்கவும். இது மனநலனையும் மேம்படுத்தும்.