ஆர்கானிக் உணவுப் பொருட்கள் தரமாக இருக்கிறதா? கண்டறிவது எப்படி? இதோ டிப்ஸ்!
ஆர்கானிக் என்ற லேபிள் இருப்பதை வைத்து மட்டுமே அதை நம்பிவிட முடியாது. உற்பத்தியாளர், விவசாயி, எங்கே விளைவிக்கப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNPOP (National Program for Organic Production) அல்லது APEDA (Agricultural and Processed Food Products Export Development Authority) ஆகிய அரசின் அங்கீகாரம் பெற்றதா? அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்களின் லேபிளில் குறிப்பிட்டுள்ள தகவல்களை படித்து உறுதி செய்ய வேண்டும்.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைக்கு தனியாக ஒரு தோற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் நிறம், உருவம் மிகச் சரியாக இருக்காது. உதாரணத்திற்கு தக்காளி இருக்கிறது என்றால் அதன் தோலின் நிறம் சீரற்று இருக்கும். மெழுகு உள்ளிட்டவைகள் பூசப்பட்டு மின்னும் தன்மையில் இருக்காது.
நீங்கள் ஆர்கானிக் கடைகளில் இருந்து வாங்கும் பழங்கள், காய்கறிகளின் மணம் நன்றாக இருக்கும். அதில் இயற்கையான மணம் இருக்கும். ஏனெனில், இது உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஃப்ரெஷாக சந்தைகளுக்கு அனுப்பப்படும்.
இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களின் சுவை தரமாக இருக்கும். அதன் சுவையை தனியாக கண்டறிந்துவிடலாம்.
அதில் தாது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். ரசாயனம் பயன்படுத்தப்படாததால் அதற்கு தனி சுவை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கவனத்துடன் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -