Mushroom Pulao:சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி- காளான் புலாவ் செய்வது எப்படி?
என்னென்ன தேவை? அரிசி - ஒரு கப் காளான் - 1/2 கி வெங்காயம் -இரண்டு தேங்காய் பால் - ஒரு கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் தாளிக்க: சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன் சீரகம் - ஒரு ஸ்பூன் நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன் புதினா, கொத்தமல்லி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் (நெய், தேங்காய் எண்ணெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.) ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும்.
தேங்காய் பால் எடுத்து தனியே வைக்கவும். தேங்காய் பால் திக்காக இருந்தால் நல்லது. பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதா எடுக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்க்கவும்.காளானை பெரிய அளவிலான துண்டுகளாக நறுக்கலாம்.
இல்லையெனில், முழு காளானை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சேர்க்கலாம். காளான் அளவில் ரொம்ப பெரிதாக இருந்தால் ஒன்று இரண்டாக நறுக்கி சேர்க்கலாம். இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான காளான் புலாவ் தயார்.
இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம். எடை குறைப்பு பயணத்தில் இருக்கும்போது காளான் நல்லதா என்று கேட்டால் - ஆம். இது சிறந்த தேர்வு. காளான்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -