Terrace Gardening : மாடித்தோட்டம் வேண்டுமா? இப்படி செய்தால் செடிகள் வளமாக இருக்கும்!
மாடி தோட்டம் போடுவதற்கு செம்மண் அல்லது தோட்டத்தில் இருக்கும் மண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாடி தோட்டம் போடுவதற்கான மண் கலவை : ஒரு பங்கு மண், ஒரு பங்கு மண்புழு, ஒரு பங்கு அளவிற்கு கோகோ பீட் , ஒரு கைப்புடி அளவிற்கு வேப்பம் புண்ணாக்கு. அனைத்தையும் சேர்த்த இந்த கலவையில்தான் விதைகளை விதைக்க வேண்டும்.
மண் கலவை தயாரித்த உடனே விதைகளை போடக்கூடாது, ஏனென்றால், மண் விதைக்கும் பருவத்திற்கு வருவதற்கு 3 நாட்கள் ஆகலாம். அந்த மண் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
மண் புழு இல்லை என்றால் காய்கறி, பழத்தின் தோலை உரமாக பயன்படுத்தலாம். மாட்டு சாணம், ஆட்டு சாணம் ஆகியவற்றை கூட மண்ணில் கலந்து கொள்ளலாம். நன்றாக மக்கிய பிறகு விதைகைளை பயிரிடலாம்.
சரியான விதையை தேர்வு செய்யவும். பூச்சி அரித்த விதைகளை தவிர்த்துவிட்டு புது விதைகளை விதைக்கலாம். இதனால் செடிகள் விரைவில் வளர்த்துவிடும்
கீரை விதைகளை விதைக்கும் போது அதனோடு சாம்பலும் கலந்து விடவும். இந்த சாம்பல் விதைகளை எறும்புகள் அரிக்காமல் காக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -