Ugadi Pachadi Recipe : சுவையான உகாதி பச்சடி...இப்படி செய்து அசத்துங்க!
தெலுங்கு புத்தாண்டான உகாதி அன்று உகாதி பச்சடி தயாரிப்பது வழக்கம். இந்த பச்சடியை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
ஒரு கிண்ணத்தில், தண்ணீரில் அலசிய வேப்பம் பூ 1 ஸ்பூன், நழுவி நறுக்கிய வெள்ளரிக்காய் 2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் துருவிய வெல்லம், 1 ஸ்பூன் புளி கரைசல் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனுடன் நறுக்கிய மா பிஞ்சு 2 ஸ்பூன், சாரப் பருப்பு, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்து விதை மற்றும் கொட்டை வகைகளையும் சேர்த்து ஒன்றரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்
மேற்கூறிய பூசணி விதை, பாதாம் , வெள்ளரி விதை உள்ளிட்டவற்றை நறுக்கி சேர்க்க வேண்டும். உங்களுக்கு வேண்டும் என்றால், ஒன்றரை ஸ்பூனுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
இதனுடன் சிறிது மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான உகாதி பச்சடி தயார்.
இந்த பச்சடியில் அறுசுவை உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.