Tawa Pulao Recipe : அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி..தவா புலாவை உடனே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள்: தண்ணீர், பாஸ்மதி அரிசி - 1 கப், உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி, பாவ் பாஜி மசாலா - 3 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு - 2 வேகவைத்து நறுக்கியது, பச்சை பட்டாணி - 1 கப் வேகவைத்தது, கொத்தமல்லி இலை நறுக்கியது.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு ஊறவைத்த பாஸ்மதி அரிசி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
அடுத்து கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய் விழுது சேர்த்து கலந்துவிட்டு பின்பு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து கலந்து அதில் கரம் மசாலா தூளை சேர்க்கவும். பின்பு பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
இறுதியாக வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் அருமையான தாவா புலாவ் தயார்!