முடி உதிர்வு பிரச்சனையா? கவலையே வேண்டாம்! இதை பாலோ பண்ணுங்க
முடி வளர்ச்சிக்கு முடியை முறையாக பராமரிப்பது அவசியம் தான். அதே நேரத்தில் ஊட்டச்சத்தும் மிக அவசியம் ஆகும். சிறுதானிய வகைகள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் உள்ளிட்டவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது.
ஆளி விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியை பளபளப்பாக வைத்திருக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது.
எள் விதையில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த எள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகிறது.
சூரியகாந்தி விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் உங்கள் இழைகளை ஆழமாக சீரமைக்கவும், செயலற்ற மயிர்க்கால்களைத் தூண்டவும் உதவும் என சொல்லப்படுகிறது.
பாதாமில் வைட்டமின் பி7 , வைட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதவை ஆகும்.