Tawa Prawn Masala:தவா ப்ரான் மசாலா செய்யலாமா? அசத்தலாக செய்வது எப்படி?
முதலில் இறாலில் இருந்து அதன் நடுவே இருக்கும் கருப்புநிற நரம்பை நீக்க வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கொஞ்சம் மிளகாய் தூள் போடவும். பின்னர் அதில் டீவெய்ன் செய்த இறால்களைப் போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும். அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே பேனில் எண்ணெய் ஊற்றி பட்டை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி என ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
இது நன்றாக கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறாலை சேர்க்கவும். மசாலில் இருந்து எண்ணெய் பிரிந்தவுடன் அதன் மீது கொஞ்சம் எலுமிச்சை சாறு ஊற்றவும். பின்னர் மல்லி இலை தூவி பரிமாறவும்.
இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -