Wheat Ghee Ball : நாவில் கரையும் பதத்தில் கோதுமை நெய் உருண்டை ..ஈசியா செய்யலாம்!
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையை அளந்த அதே கப்பால் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்க்கரை உருகும் வரை கரண்டியால் கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை கப் செய் சேர்க்கவும்.
நெய் உருகியதும், அடுப்பின் தீயை குறைத்து விட்டு, ஒரு கப் கோதுமை மாவை சேர்த்து மாவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
மாவை வறுக்கும் போதே, இதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரை இதில் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.
ஒருமுறை தண்ணீர் சேர்த்து, அந்த தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை கிளறி விட வேண்டும். இதே முறையில் ஒவ்வொரு முறையும் சேர்த்து கிளறி விடவும்.
அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, பின் இந்த கலவை லேசாக ஆறியதும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். அல்லது இதை அல்வா போன்றும் சாப்பிடலாம். இதன் சுவை அலாதியாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -