Vegetable Momos Recipe : அனல் பறக்கும் சுவையான மோமோஸ் செய்வது எப்படி?
மோமோஸ் மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் : மைதா - 1 கப், உப்பு - 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர்.
மோமோஸ் நிரப்ப தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 1 , பூண்டு, இஞ்சி, குடை மிளகாய், கேரட் - 1 , துருவிய முட்டைக்கோஸ் - 1/2, உப்பு, மிளகு - 1 தேக்கரண்டி, வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
மோமோஸ் செய்முறை விளக்கம் : வெஜ் மோமோஸ் தயாரிக்க முதலில் மாவு பிசைய வேண்டும். அதற்கு ஒரு கப் மைதா, தேவையான அளவு உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை பிசைந்த பின்பு அதை மூடி போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்
அடுத்து மோமோஸ் நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நிறம் மாறிய பின்பு நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள், வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி பின்பு இறக்கி வைக்கவும்
அடுத்து பிசைந்து வைத்த மாவில் ஒரு சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் தேய்த்து வைத்து செய்து வைத்துக் கொள்ளவும். செய்து வைத்த மாவில் மோமோஸ் கலவையை சேர்த்து அதனை முழுவதும் மூடி வைக்கும் படி அதனை வடிவமைத்துக் கொள்ளவும்.
செய்து வைத்த மோமோஸை ஒரு இட்லி தட்டில் தண்ணீர் ஊற்றி அதனை 10 நிமிடத்திற்கு வேக வைக்கவும். வேக வைத்த சூடான மோமோஸை கெட்சப் உடன் பரிமாறலாம்.