Banana Oats Cookies : சுவையான வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ்.. இனி வீட்டிலேயே செய்யலாம்!
தேவையான பொருட்கள் : 3 வாழைப்பழம், 1/2 கப் ஓட்ஸ், உப்பு தேவையான அளவு, 1/2 கப் உலர்ந்த திராட்சை, 1/4 டீஸ்பூன் பட்டை பொடி, 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்
செய்முறை : 3 பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். பின் அதனோடு ஓட்ஸ் தூளை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர், ஒரு சிட்டிகை உப்பு, உலர் திராட்சை சேர்த்து நன்கு கலந்தால் குக்கீஸ் செய்வதற்கான மாவு தயாராகிவிடும்.
பேக் செய்ய டிரேவை எடுத்து கொண்டு, அதன் உள்ளே பட்டர் சீட்டை வைக்க வேண்டும்
அதன்பிறகு , குக்கீஸ் கலவையை ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுத்து போட வேண்டும். அதன் மேல் ஒரு கரண்டியை வைத்து அழுத்தம் கொடுத்து பிஸ்கெட் வடிவிற்கு கொண்டு வரவும். அது மேல் சிறிது சாக்கோ சிப்ஸ்களை தூவிடவும்
கடைசியாக, மைக்ரோ ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான பனானா ஓட்ஸ் குக்கீஸ் தயார். இதை ஐஸ்கிரீம் உடன் வைத்து சாப்பிடலாம்.