Egg Pulao Recipe : வீட்டை மணக்க வைக்கும் முட்டை புலாவ் ரெசிபி இதோ உங்களுக்காக..
முட்டை தவா புலாவ் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 6, வேகவைத்த சாதம் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் - 3/4 கப், கொத்தமல்லி இலை நறுக்கியது
முட்டை தவா புலாவ் செய்முறை : அகல இரும்பு தவாவில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா தூள், தனியா தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.அடுத்து இதில் மிளகாய் விழுது சேர்த்து கிளறவும்.இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
மசாலாவில் பச்சை வாசனை போனபின், இதில் முட்டை சேர்த்து 8 நிமிடம் வேகவைக்கவும். முட்டை நன்கு வெந்ததும், இதில் வேகவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
இறுதியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.சுவையான முட்டை தவா புலாவை சுட சுட, வெங்காய பச்சடியுடன் பரிமாறவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -