30 Plus Diet : 30 வயசுக்கு மேல ஆயிடுச்சா? கண்டிப்பா இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்க!
வைட்டமின் பி6, இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மீன், சிக்கன், தானியங்கள், பாதாம், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதயம் மற்றும் தசைகளை வலுவாக்க, உடலுக்கு மெக்னீசியம் தேவைப்படுகிறது. சர்க்கரை அளவை சீராக வைக்கவும் , இரத்த அழுத்தத்தை குறைக்கவும், உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறது.
கொழுப்பு மீன்களில் அதிகமாக உள்ள ஓமேகா-3, புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் ஆபாயத்தை குறைக்க உதவலாம். ஓமேகா-3, இரத்த நாளங்கள், மூளை, இதய செயல்பாட்டை சீராக வைக்கலாம்.
இரத்தம் உறைவதற்கும் எலும்பு வலுவாக இருப்பதற்கும் வைட்டமின் கே கண்டிப்பாக தேவை. பச்சை இலை காய்கறிகள், பழங்களில் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது.
பார்வை திறன் மேம்பட, சரும ஆரோக்கியம் மேம்பட, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைட்டமின் ஏ அவசியம். கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பால் பொருட்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.
30 வயதுக்கு மேல் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்க இரும்பு சத்து அவசியம். பால், முட்டை, ஆடு, கோழி, மீன், கருவாடு, ஈரல் முதலிய உணவுகளில் இரும்பு சத்து இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -