Sago Sarbath : வெயிலுக்கு ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. இப்படி செய்து அசத்துங்க!
400 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் ஒரு பாக்கெட் ஜெல்லி கிரிஸ்டல் சேர்த்து கரைந்ததும் இந்த தண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு ட்ரேயில் ஊற்றி வைக்கவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App30 நிமிடங்களுக்கு பின் ஜெல்லி செட் ஆகி இருக்கும். இதை உங்களுக்கு வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இதன் தண்ணீரை வடித்து விட்டு வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீ எடுத்து சூடாக்காவும். தண்ணீர் சூடானதும் ஜவ்வரிசியை தண்ணீரில் சேர்த்து வேகும் வரை கிளறி விடவும்.
ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்து ஒரு கிண்ணம் அல்லது பெளலில் ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து கால் கப் அளவு சர்க்கரை, அரை ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும்.
பின் தயாரித்து வைத்துள்ள ஜெல்லி துண்டுகளையும் இதனுடன் சேர்த்து கலந்து விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறலாம்.
தேவைப்பட்டால் பாதம் அல்லது பிஸ்தா துகள்களை கொண்டு இந்த சர்பத்தை அலங்கரித்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -