Can Water : கேன் வாட்டர் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஆறுகளில் தண்ணீர் இல்லை. ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளில் மாசுபட்டு, நச்சுக்கள் கலந்துவிட்டது. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் கேன் தண்ணீர் விற்கப்படுகிறது என சென்சஸ் கணக்கு கூறுகிறது.
தண்ணீர் கேன்களில் FSSAI முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், BIS (Bureau of Indian Standards) என்ற தர நிர்ணய அமைப்பு வழங்கும் ஐ.எஸ்.ஐ (ISI) தரச்சான்றிதழ் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு சான்றிதழ்கள் இல்லாத தண்ணீர் கேனை வாங்க வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
தண்ணீர் கேன் வழங்கும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம், பேட்ச் எண், CML (Central Marking License) என்ற லைசென்ஸ் எண் போன்ற தகவல்கள் போன்றவற்றை தெளிவாக பார்க்கவும்.
சரியான பிராண்ட் தண்ணீர் கேனை பார்த்து வாங்க வேண்டும். சில தரமற்ற தண்ணீர் கம்பெனிகள் லாபத்திருக்காக பாட்டில்களையும், மூடிகளையும் தரமற்ற முறையில் மறுசுழற்சி செய்கின்றனர்.
தண்ணீர் கேன்கள் வளையாமல் இருக்கவும், எளிதில் உடையாமல் இருக்கவும் பல்வேறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பிளாஸ்டிக்கிலிருந்து வரும் ரசாயனங்கள் உடலில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கலாம்.
தண்ணீர் கேன் வாங்கும் போது காலாவதி தேதி மூடியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மாறாக அந்த தேதி ஷீட்டில் அச்சிடப்பட்டு ஒட்டி இருந்தால் அந்த தண்ணீர் கேனை தவிர்த்துவிடுங்கள்.