Egg Bonda Recipe : சுவைமிக்க முட்டை போண்டா.. மாலை நேரத்தில் செய்து அசத்துங்க!
முட்டை ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 4, எண்ணெய் - 2 தேக்கரண்டி, வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு - 1/4 தேக்கரண்டி, மிளகு, முட்டை மஞ்சள் கரு, கொத்துமல்லி தழை
முட்டை போண்டா மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் : கடலை மாவு - 3/4 கப், அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/4 தேக்கரண்டி, தண்ணீர்
செய்முறை : முதலில் முட்டையை சுடு தண்ணீரில் வேக வைக்கவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும்
தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும் 5. அடுத்து முட்டை போண்டாவிற்கு மாவு தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து மாவாக கரைக்கவும்
செய்து வைத்த மாவில் முட்டையை நனைத்து சூடான பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். அவ்வளவுதான் இனி டீக்கடைக்கு சென்று முட்டை போண்டா வாங்க மாட்டீர்கள்.