Oats Ven pongal: நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ்.. வெண் பொங்கல் இந்த மாதிரி செய்து அசத்துங்க...
பாசிப்பருப்பை, நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் 11/4 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக வைத்து, அதை நன்றாக மசித்து விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓட்ஸை எடுத்து, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 2 கப் தண்ணீர் சேர்த்து ஓட்ஸை நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், சீரகம் 1 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 2 , நறுக்கிய இஞ்சி 1 டீஸ்பூன், முந்திரி 10- 15 மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதை பொங்கல் உடன் கலந்தால், சுவையான வெண்பொங்கல் தயார்.
ஓட்ஸ் ஒரு ஆரோக்கியமான, நிறைவான உணவாகும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. தசையை உருவாக்க புரதம் அவசியம். எனவே இது தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -