பால் கேக் இப்படி செய்து பாருங்க..சுவை வேற லெவலில் இருக்கும்!
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் பால் சேர்த்து, ஒரு லிட்டராக மாறும் வரை காய்ச்ச வேண்டும். பால் கொதிக்கும் போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வினிகர் சேர்க்கவும். இப்போது பால் திரிந்து வரும்.
பால் திரிந்து வரவில்லை என்றால் மேலும் சிறிது வினிகர் சேர்த்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பால் திரிந்த உடன் தண்ணீர் தனியாக பிரிந்து நிற்கும்.
இப்போது இதனுடன் 150 கிராம் சர்க்கரை, அல்லது உங்களுக்குத் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து இந்த தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். பின் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டி விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றியதும், இதை ஒரு ட்ரேவுக்கு மாற்றிக் கொள்ளவும்.
இந்த கலவையை சமப்படுத்தி விட்டு, இதை இரண்டு மணி நேரம் ஆற விட்டு, இப்போது இதை உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் சுவையான பால் கேக் தயார். இதன் சுவை அபாரமாக இருக்கும்