Mango Payasam : மாம்பழத்தில் தித்திக்க தித்திக்க பாயசம் செய்து பாருங்க மக்களே!
தேவையான பொருட்கள் : அரைத்த மாம்பழ விழுது - 250 மி.லி, பால் - 1 லிட்டர், வேகவைத்த ஜவ்வரிசி - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, சேமியா - 1/2 கப், முந்திரி பருப்பு, குங்குமப்பூ, காய்ந்த திராட்சை, நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே பானில் சிறிதளவு நெய் ஊற்றி சேமியாவையும் வறுத்து எடுக்குக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்கவிடவும். பால் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து கிளறிவிடவும். அதன் பிறகு ஜவ்வரிசியை சேர்த்து பாலை கொதிக்க விடவும்.
அடுத்தது சர்க்கரை சேர்த்து பாலில் கரையும் வரை கிளறிவிடவும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து பாலை கிளறவும்.
image 5அதன் பிறகு நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து பாயசத்தை இறக்கி 10 நிமிடம் ஆறவிடவும்
கடைசியாக பாயசத்தில் அரைத்து வைத்துள்ள மாம்பழ சாறை சேர்த்து நன்கு கலக்கினால் சுவையான மாம்பழ பாயசம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -