Egg Adai: மிருதுவா பொசுபொசுன்னு முட்டை அடை ரெசிபி.!
இந்த அடை செய்ய ஒரு பௌலில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டு கடலை, சோம்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து பொடியாக மைய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை கலவையில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்த பின், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கினால் அடை மாவு தயாராகி விடும். இப்போது அடுப்பில் கல் வைத்து சூடானதும் அடை ஊற்றுவது போல் சற்று தடிமனாக ஊற்றி வேக வைத்து திருப்பி விட்டு வேக வைத்து எடுத்தால் அடை தோசை தயார்.
இதற்கு சைட் டிஷ் இல்லாமலே சாப்பிடலாம். கார சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவையும் இதற்கு நல்ல காம்போவாக இருக்கும்.
முட்டை தினமும் சாப்பிட வேண்டும். புரோட்டீன் உடல்நலனுக்கு நல்லது.