Cauliflower Chilli :காலிஃப்ளவர் சில்லி ...இந்த மாதிரி செய்து பாருங்க.!
முதலில் காலிபிளவரை தண்டு பகுதிகளோடு வெட்டி சுடுதண்ணீரில் போட்டு, 7 செகண்டில் சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும். காம்பு இல்லாமல் காலிஃப்ளவரை சில்லி போட்டாலும் காலிபிளவர் சில்லி சரியாக வராது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுடுதண்ணீரில் இருந்து எடுத்த காலிஃப்ளவரை தண்ணீரை வடித்து விட்டு ஒரு அகலமான பெளலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
இதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், சில்லி சிக்கன் 65 பவுடர், பஜ்ஜி மாவு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக பாத்திரத்தை குலுக்கி விட வேண்டும்.
மாவு காலிஃப்ளவரில் ஒட்டாததுபோலவே தெரியும். ஆனாலும் இந்த இடத்தில் தண்ணீர் தெளித்து மசாலாக்களை காலிபிளவரோடு ஒட்ட வைக்க கூடாது. 2 நிமிடங்கள் நன்றாக குலுக்கி விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
உங்கள் கைகளைக் கொண்டு காலிபிளவர் உடையாமல் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து பிசையும் போது, மசாலாக்கள் காலிபிளவரோடு நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
இறுதியாக இந்த காலிஃப்ளவரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். காலிபிளவரில் எண்ணெய் சேர்த்து செய்யும் போது காலிபிளவர் மொறுமொறுவென வரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -