Kerala Style Mutton Curry: கேரளா ஸ்டைல் மட்டன் கறி ரெசிபி!
முதலில் நாம் ஆட்டிறைச்சியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இதை 15-20 நிமிடங்கள் அல்லது விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்க வேண்டும். சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்க வேண்டும்.
அடுத்து, சமைத்த ஆட்டிறைச்சியுடன் தேங்காய், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். அதனுடன் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயைக் குறைத்து, ஒரு மூடியால் மூடி, 20-25 நிமிடங்கள் மிதமான அல்லது லேசாசன தீயில் வேக வைக்க வேண்டும். இதை அவ்வப்போது கிளறி விட வேண்டும்
அவ்வளவுதான் கேரளா ஸ்டைல் மட்டன் கறி சுவைக்க தயாராகி விட்டது. இதை சூடாக பரிமாறலாம்.
கறி தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படுவதுடன் இதில் தேங்காயும் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு சமைக்கப்படும் கேரள உணவுகள் ஒரு நல்ல சுவையுடன் இருக்கும். இந்த ரெசிபியை குறைந்த நேரத்தில் சமைத்து விட முடியும். மட்டன் அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -