Cashew Nuts Cake: எலும்பு வலிமையை அதிகரிக்க உதவும் முந்திரி கேக் - ரெசிபி இதோ!
முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுதை சிறிது சிறிதாக பாகில் கொட்டி கிளற வேண்டும். குங்குமப்பூ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும்.
சிறிது நேரத்திலேயே கலவை கெட்டியாக மாறி விடும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, சிறிது நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை சிறிதளவு சூடு ஆறியதும் இதை நெய் தடவிய தட்டில் சேர்த்து சமமாக கரண்டியை வைத்து பரப்பி விட வேண்டும்.
கத்தியால் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி விட்டு, ஆறியதும் எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு தான் சுவையான முந்திரி கேக் தயார்.
முந்திரியில் அதிக அளவில் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தரும் என சொல்லப்படுகிறது. மேலும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் ஆகிய பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் எனவும் சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -