Banana Barfi : சுவையான வாழைப்பழ பர்ஃபி ..எளிமையான செய்முறை இதோ!
தோலுரித்த மூன்று வாழைப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கப் வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வெல்லம் உருகும் வரை கரண்டியால் கிளறி விட வேண்டும். வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தலா அரை கப் நெய் மற்றும் கோதுமை மாவு சேர்த்து வறுக்க வேண்டும். லேசாக வறுபட்டதும், கால் கப் ரவையையும் இதனுடன் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
ரவை வறுபட்டதும் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு, வெல்ல பாகையும் இதனுடன் சேர்க்கவும்.
உங்களுக்கு தேவையாயான ஏதேனும் ஒரு உணவு நிறமியை இதில் சேர்த்து, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் சிறிது நறுக்கிய பாதாம் பருப்புகளை இதனுடன் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி விட்டு, இதன் மேல் சிறிது நறுக்கிய பிஸ்தா பருப்பை சேர்த்து இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும் . பின் இதை உங்களுக்கு வேண்டிய வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -