Mango Jam Recipe : மாம்பழத்தில் சுவையான ஜாம் செய்யலாம்..செய்முறை இதோ!
நல்ல பழுத்த 7 மாம்பழங்களை தேர்வு செய்து எடுத்துக் கொண்டு இதன் தோலை நீக்கி விட்டு, கொட்டைகளை நீக்கவும். இப்போது இந்த மாம்பழத்தை ஒரு கப்பில் அளந்துகொள்ளவும். இதே அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை சற்று குறைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்ந்து நன்கு மையஅரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு நான் ஸ்டிக் பேனை(pan) அடுப்பில் வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கிளறவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும். மாம்பழத்தின் பச்சை வாசம் போய் ஒரு வாசம் வரும். மேலும் மாம்பழம் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும். இப்போது சர்க்கரையை இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
சர்க்கரை உருகி மாம்பழத்துடன் சேர்ந்து அல்வா பதம் வரும வரை கரண்டியால் கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
அல்வா பதம் வந்ததும் 4 ஸ்பூன் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். மிக கெட்டியாகி விடுவதற்கு முன்பு இறக்கி விடவும். அப்படி ஆனால், ஆறியதும் ஜாம் பதத்தை விட கெட்டி ஆகி விடும்.
இதன் சூடு குறைந்ததும் இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதை பிரெட் உடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.