Pav Bhaji Recipe : நாவில் எச்சில் ஊற வைக்கும் மும்பை பாவ் பாஜி ரெசிபி இதோ!
பாவ் பாஜி செய்ய தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 3 தோல் நீக்கி நறுக்கியது, கேரட் - 3 நறுக்கியது, பச்சை பட்டாணி - 1 கப், காலிஃபிளவர் - 1 நறுக்கியது, உப்பு, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, தண்ணீர் - 2 1/2 கப், உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி - 5 பொடியாக நறுக்கியது, பாவ் பாஜி மசாலா தூள் - 4 தேக்கரண்டி, குடைமிளகாய் - 1 நறுக்கியது, பாவ் பன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி, காலிஃபிளவர், உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு வேகவைத்த காய்கறிகளை மசித்து வைக்கவும். அடுத்து அகலமான கடாயில் உப்பில்லாத வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து வதக்கவும்.பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.பிறகு நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கலந்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்பு மசித்த காய்கறிகளை சேர்த்து கிளறி, பிறகு தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.காய்கறிகளை நன்கு மசித்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். அடுத்து தவாவில் சிறிது வெண்ணெய் சேர்த்து பாவ் பன்னை பாதியாக வெட்டி தாவாவில் வைத்து ரோஸ்ட் செய்யவும்.
பிறகு அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி மறுப்பக்கம் திருப்பி விட்டு ரோஸ்ட் செய்யவும்.பின்பு ரோஸ்ட் செய்த பாவ் பன்னை பாவ் பாஜி மசாலாவுடன் சூடாக பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -