Ada Payasam : தித்திப்பான அடை பாயாசம்.. தமிழ் வருட பிறப்பன்று இப்படி செய்து அசத்துங்க!
அரை கப் பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் 3 ஸ்பூன் சர்க்கரை, 3 எலக்காய், 3 தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு ஸ்பூன் மாவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் 2 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீரில் ஸ்டாண்டு வைத்து அதன் மீது ஒரு அகலமான தட்டு வைத்து இதில் அரைத்து வைத்துள்ள மாவை பாதியளவு சேர்த்து மெல்லிய சைஸ் அடையாக ஊற்றவும்.
இதை ஒரு மூடி போட்டு எட்டுலிருந்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி 5 நிமிடம் ஆறியதும், தட்டில் இருக்கும் அடையை தோசை போல் தனியாக எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மீதம் உள்ள மாவையும் இதே போன்று அடையாக் அவித்து எடுத்து வெட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் முக்கால் கப் அளவு வெல்லம் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் உருகியதும். அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி, பின் இந்த வெல்லப் பாகை அதே பாத்திரத்தில் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெட்டி வைத்துள்ள அடைகளை சேர்க்கவும்.
இந்த வெல்லப்பாகு கொதித்ததும் நாம் ஏற்கனவே எடுத்து வைத்த 2 ஸ்பூன் அரிசி மாவை கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து வெல்லப் பாகுடன் சேர்த்து விடவும். இது 2 நிமிடம் வெந்ததும் 1 கப் திக்கான தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடம் வெந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும்.
கடைசியாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சிறிது முந்திரி, நறுக்கிய கால் கப் தேங்காய், சிறிது காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்த்து கலந்து விடவும். தித்திப்பான அடை பாயாசம் ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -