Mango Pudding Recipe : மாம்பழ சீசன் வந்தாச்சு.. இந்த அருமையான புட்டிங்கை செய்து அசத்துங்க!
மாம்பழ புட்டிங் தேவையான பொருட்கள் : மாம்பழம் - 4, சர்க்கரை - 1/4 கப், தண்ணீர் - 1/2 கப், சீனா கிராஸ் - 5 கிராம், கிரீம் - 1/2 கப், பால் - 1/4 கப்
மாம்பழ புட்டிங் செய்முறை : முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல் பகுதியை நீக்க வேண்டும்.அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும். மற்றோரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்
இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து இந்த மாம்பழ கலவையில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்
தயாரான மாம்பழ கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு பிரிட்ஜ்ல் வைத்து எட்டு மணி நேரம் குளிரூட்டவும். எட்டுமணி நேரம் கழித்து மாம்பழ துண்டுகள் மற்றும் புதினா இலை சேர்த்து பரிமாறவும்.