Tamarind Benefits : புளியில் இப்படி ஒன்னு இருக்கா? சமையலில் ஒளிந்திருக்கும் அறிவியல்!
தனுஷ்யா | 23 Oct 2023 11:58 AM (IST)
1
புளியமரத்தில் இருந்து எடுக்கப்படும் புளி இந்திய சமையல்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென்னிந்திய உணவுகளை செய்ய புளி தேவைப்படுகிறது.
2
உணவுக்கு புளிப்பு சுவையை கொடுக்கிறது. அத்துடன் உணவு எளிதில் கெட்டுப்போகாமல் இருக்கவும் உதவுகிறது.
3
வெளியூருக்கு எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால், மூன்று வேளைக்கும் புளிசாதம் செய்து எடுத்துக்கொண்டு போவார்கள்.
4
இந்த காரணங்களை தாண்டி புளியை பயன்படுத்த ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சாம்பர் செய்யும் போது காய்கறிகளை புளி தண்ணீரில் வேகவைப்பது வழக்கம்.
5
இப்படி செய்யும் போது, புளியில் இருக்கும் டார்டாரிக் அமிலம், காய்கறிகளில் உள்ள சத்துக்களை பாதுகாக்கும். காய்கறிகள் வேகும் போது புரத சத்து அப்படியே இருக்கும்.
6
இதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருப்பது பலருக்கும் தெரியாது.