Peas Potato Curry Recipe: பச்சை பட்டாணி பால்கறி கூட்டு செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு பட்டாணியை இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு கீற்று தேங்காய், சோம்பு , ஒரு டேபிள் ஸபூன் பொட்டு கடலை, 5 முழு முந்திரி பருப்பு, சின்ன வெங்கயாம், பச்சை மிளகாய், கசகசா சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு அதை சூடாக்க வேண்டும். அதில் ஒரு இஞ்ச் பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை வெட்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசனை போன பிறகு அதில் 3 பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
தக்காளி வதங்கிய பின்னர் அதில் வேக வைத்து எடுத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பால் கறி கெட்டியாகி வரும் போது புளிக்காத கெட்டி தயிரை கொஞ்சம் அதில் சேர்த்து கலந்து விட வேண்டும். தயிர் சேர்ப்பதன் மூலம் பால் கறி நல்ல சுவை மற்றும் வாசனையாக இருக்கும். கடைசியாக இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து விட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -