Health Tips:மருத்துவர் பரிந்துரையில்லாமல் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்றீங்களா? இதைப்படிங்க!
இன்னும் சிலர் ஹெல்த் கான்சியஸ் என்ற பெயரில் வைட்டமின், அயர்ன், ஜிங்க் என்று சத்து மாத்திரைகளையும் விழுங்கிவைப்பார்கள். வைட்டமின், ஜிங்க் போன்ற சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇல்லாவிட்டால் அதிகமான சப்ளிமென்ட், முறையற்ற சப்ளிமென்ட்டுகள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
இணையங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்தும் மக்கள் சில நேரங்களில் கண்டபடி வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது உண்டு. வைட்டமின் பி, கே, டி, பி12, பயோடின், ஜிங்க் போன்ற சப்ளிமென்ட்டுகளும் சந்தையில் மலிந்து கிடக்கின்றன.
வைட்டமின்கள் அதிகமானால் லேசான குமட்டலை ஏற்படுத்தும். மிக அதிகமான வைட்டமின்கள் கோமாவை கூட ஏற்படுத்தும். வைட்டமின் ஏ வை ஒரு நபர் 200 மில்லிகிராமுக்கு மேல் எடுத்துக் கொண்டால் Hypervitaminosis ஹைப்பர்வைட்டமினோஸிஸ் ஏற்படும்.
ஹைப்பர்விட்டமினோசிஸ் ஏ ஒரு கடுமையான அல்லது நாள்பட்ட வைட்டமின் ஏ சத்து அதிகரிப்பால் உண்டாவது இருக்கலாம்.இது அக்யூட் மற்றும் க்ரானிக் என இரண்டுவகைப்படுகிறது.
வைட்டமின் பி அதிகமானால் அது உயர் ரத்த அழுத்தம், அடிவயிற்று வலி, பார்வையில் கோளாறு, கல்லீரல் சேதம் ஆகியனவற்றை ஏற்படுத்தும். வைட்டமின் பி6 அதிகமானால் குமட்டல், நெஞ்செரிச்சல், சரும வெடிப்புகள், வெளிச்சத்தால் ஏற்படும் அழற்சிகள் ஆகியன ஏற்படும்.
வைட்டமின் சி அதிகமானால் அது வயிற்றோட்டம், அடிவயிற்று வலி, குமட்டல், வாந்தி, ஒற்றைத் தலைவலி ஆகியனவற்றை ஏற்படுத்தும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -