உங்கள் லஞ்ச் பாக்சை கழுவிய பின்னரும் துர்நாற்றம் வீசுகிறதா? எப்படி தவிர்ப்பது?
பேக்கிங் சோடா பேஸ்டை டிஃபன் பாக்ஸில் தடவி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு அதை சுத்தம் செய்யவும். உங்கள் டிஃபன் பாக்ஸ் துர்நாற்றம் போய்விடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவேகவைக்காத உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள் அதை வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் உப்பு தேய்த்துக் கொள்ளுங்கள். அந்த உருளை ஸ்லைஸைக் கொண்டு டிஃபன் பாக்ஸின் உள்புறத்தில் நன்றாக தேய்த்துவிடுங்கள். பின்னர் அதனை அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவையுங்கள்.
வெள்ளை வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட் டிஃபன் பாக்ஸில் உள்ள பாக்ட்ரீயாக்களை கொலை செய்து அதனால் ஏற்படும் அல்கலைன் நாற்றத்தைப் போக்கும்.
எலுமிச்சை தோல் நல்ல க்ளென்ஸர். அதனால் அது மோசமான துர்நாற்றத்தை நீக்க நன்றாக வேலை செய்யும். ஒரு ஃப்ரெஷ்ஷான எலுமிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை ஏதுமில்லாமல் எளிமையாக டிஃபன் பாக்ஸ் துர்நாற்றம் போக்க இன்னொரு வழியும் இருக்கிறது. அதாவது ஒரு துண்டு லவங்கப்பட்டை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அந்தத் தண்ணீரை டிஃபன் பாக்ஸில் ஊற்றிவைக்கவும். அது ஆறியவுடன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.
சுத்தம் இறைமைக்கும் மேலானது என்பார்கள். அதனால் நாம் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வயிறு சம்பந்தமான உபாதைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். கிச்சனில் உருவாகும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் சீரியஸான தொற்றை ஏற்படுத்துக் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம் மக்களே!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -