Swimming Health Benefits : வெயில் காலத்துக்கு ஏற்ற உடற்பயிற்சி... நீச்சல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நீச்சல் பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் பயிற்சி கிடைக்கும். மற்ற பயிற்சிகள் போல், நீச்சல் செய்வது அவ்வளவு கடினமானது அல்ல. கற்றுக்கொண்டால், ஜாலியாக தண்ணீரில் விளையாடலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீச்சல் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்
நீச்சல் செய்யும் போது அவ்வப்போது மூச்சுப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கும். ஒரு வகையான மூச்சுப்பயிற்சி செய்வதால், நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும்
நீச்சல் பயிற்சி, தேவையற்ற கொழுப்பை குறைத்து, தசைகளை வலுவாக்க உதவும். அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவும். நீச்சல் செய்வதால் இரவில் நல்ல தூக்கம் வரும். மனதிற்கு ரிலாக்ஸான உணர்வு கிடைக்கும்.
நீச்சல் குளத்தில் இருக்கும் க்ளோரின், சருமத்தை டேன் செய்துவிடும். இதுபோக, முடி உதிர்தல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகளும் வரலாம். அதனால், வாட்டர் ப்ரூஃப் சன்ஸ்கிரீன், வாட்டர் காகில்ஸ், ஷவர் கேப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும்.
மூட்டு வலி அல்லது தீவரமான உடல் நல பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நீச்சல் பயிற்சியை செய்யக்கூடாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -