Kothumai Appam : இனிப்பான கோதுமை அப்பம்..இப்படி செய்து அசத்துங்க!
கோதுமை அப்பம் செய்வதற்கு ஒரு கப் கோதுமை மாவுடன், கால் கப் அளவிற்கு அரிசி மாவு சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
பின்னர் துருவிய தேங்காய் கால் கப், ஒரு வாழைப்பழத்தை நன்கு பிசைந்து கூழாக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து உருகியதும் அடுப்பை அணைத்து, இந்த பாகை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மாவுடன் இந்த வெல்ல கரைசலை வடிகட்டி சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விட வேண்டும்.
அப்பம் சுடுவதற்கு சரியான பதத்தில் மாவை தயாரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அப்பம் சரியாக வரும். அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விட வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு குழி கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒருபுறம் லேசாக வெந்து மேலே எழும்பும்போது திருப்பி விட்டு வேக வைக்க வேண்டும்.
பொன்னிறமாக வெந்து வந்ததும் அப்பத்தை எடுத்து விட வேண்டும். அவ்வளவு தான் கோதுமை அப்பம் தயார்.