Stress Eating : இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஸ்ட்ரெஸ் ஈட்டிங்.. இதனால் என்னாகும் தெரியுமா?
உடலின் தேவைக்காகவும் பசிக்காவும் உணவு சாப்பிட்டு வந்த சமூகம், அந்தஸ்தை காட்டுவதற்கு உணவை உபயோகப்படுத்தியது.
நாளடைவில், பசிக்கு சாப்பிடுவதை காட்டிலும் மனநிலைக்கு ஏற்றவாறு சாப்பிடும் கலாச்சாரமும் தொடங்கியது. இந்த உணவு முறை ஆங்கிலத்தில் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் அல்லது இமோஷனல் ஈட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
மனநிலை சரியில்லாத போது, பசிக்கவில்லை என்றாலும், பிடித்த உணவையோ ருசியான உணவையோ அளவுக்கு அதிகமாக அதிவேகமாக சாப்பிடுவதே இந்த ஸ்ட்ரெஸ் ஈட்டிங்.
இதுபோன்று சாப்பிட்ட உடன் நல்ல மனநிலை கிடைக்கும். அப்போதைக்கு அந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், நாளடைவில் இதையே தொடர்ந்து செய்தால் பிரச்சினை வரும்
முதலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயத்தை செய்கிறோம் என்ற குற்ற உணர்வு தோன்ற ஆரம்பிக்கும்.
குமட்டல், வாந்தி, ஒவ்வாமை, உண்ட மயக்கம் ஆகியவை உடலை சோர்வாக்கிவிடும். உடல் எடை கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிவிடும்
மனநலனை காக்க, இது மட்டுமே ஒரு வழி கிடையாது. பல வழிகளில் உள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்தால் நல்ல ஃபீல் கிடைக்கும். நண்பர்களுடன் பேசினாலோ வெளியே சென்றாலோ மனம் லேசாகும்.