Coriander Leaves: கொத்தமல்லி இலை ஃப்ரெஷாக இருக்க என்ன செய்யலாம்? இதோ டிப்ஸ்!
பொதுவாக பிரிட்ஜ்க்குள் வைத்து இலையினை கெடாமல் வைத்திருப்பார்கள். ஆனால் பிரிட்ஜ் இல்லாத வீடுகளிலும் எப்படி கொத்தமல்லி இலையினை கெடாமல் வைத்திருப்பது?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பிளாஸ்டிக் டப்பாவினை எடுத்துக்கொண்டு அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீரினை ஊற்றவேண்டும்.பின்னர் பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றிய தண்ணீருக்குள், கொத்தமல்லிகட்டின் வேர் மட்டும் படும் படி உள்ளே வைக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டு படும் படி வைத்தால் அது அழுகிவிடும்.
டப்பாவில் ஊற்றியத் தண்ணீரினை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தவறாமல் செய்ய வேண்டும்.
பிரிட்ஜ் இல்லையென்றால், வெளியில் அப்படியே வைத்து விட்டால், ஒரு வாரத்திற்கு கொத்தமல்லி இலைகள் கெடாமல் பிரஷாகவே இருக்கும்.
டப்பாவினை பிளாஸ்டிக் பேப்பரினைக்கொண்டு காற்றுப்புகாதப்படி கட்டி வைத்துக்கொண்டு உள்ளே வைக்க வேண்டும். இப்படி வைத்தால் சுமார் ஒரு மாதத்திற்கு கூட கொத்தமல்லி இலைகள் கெடாமலும் பிரஷாகவும் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கொத்தமல்லி இலைகளை வாடி வதைங்கிப்போகாமல் வைத்துக்கொள்வதற்கு முதலில், கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -