Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Custard Apple: சீதாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? இதைப் படிங்க!
லைப் பிரதேசங்களில் மிக அதிகமாக விளையக்கூடியது இந்த சீதாபழம். மலைகளில் விளையும் பழங்கள் சற்று பெரியதாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபொதுவாக பச்சை அல்லது வயலெட் கலர்களில் காய்க்கும் இந்த சீதா, காயாக இருக்கும்போது மிக கடினமாக இருக்கும். அதுவே பழுத்துவிட்டால் ரொம்பவே சாஃப்ட் ஆகிவிடும்.
சீதாப்பழத்தின் மனம் நம் மூக்கை துளைக்கும். இந்தப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி6, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.
நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வர, அவர்களுக்கு அந்தப் பாதிப்பு வெகுவிரைவில் குணமாகும்.
அதேபோன்று அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்களும் இந்தப் பழத்தை சாப்பிடலாம். சீதாப்பழம் நமது உடலில் மெட்டாபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.
சீதாப்பழம் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும். இதய நலன் மற்றும் மூளையின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் சிறந்தது.
நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு சீதாப்பழம் உதவியாக இருக்கிறது. இரத்தச் சோகை கொண்டவர்கள், கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெண்கள் இந்த சீதாப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -