Masala Milk :சருமத்தை பொலிவாக்கும் மசாலாப்பால் ரெசிபி!
பாதாம், ஓடுடன் கூடிய பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுங்குமப்பூ இழைகளை ஒரு சிறிய அளவு வறுத்து பின்னர் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் அரைத்த ஜாதிக்காயுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் உங்கள் மசாலா பாலுக்கான மிக்ஸ் தயாராகி விட்டது. இதை நீங்கள் ஒரு கண்ணாடி குடுவைக்குள் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் மசாலா பால் குடிக்க விரும்பினால், 1 கப் பாலுடன் 1 டீஸ்பூன் மசாலா பொடியை கலந்து குடிக்கலாம். இனிப்புக்காக இதனுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து பருகலாம்.
குங்குமப்பூ மற்றும் ஜாதிக்காய் போன்ற பொருட்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் சேதங்களை எதிர்த்துப் போராடுவதில் இவை முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகின்றது.
மசாலா பால் உட்கொள்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -