Onion Kulcha : சுவையான வெங்காய குல்ச்சா..தோசைக்கல்லிலே செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : மைதா - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், அஜ்வைன் - 1/2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் வெங்காய கலவைக்கு : வெங்காயம் - 2 எண்கள் நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 எண்கள் நறுக்கியது, கொத்தமல்லி தழை, பூண்டு, சுவைக்கு உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில், மைதா, உப்பு, அஜ்வைன், பேக்கிங் பவுடர், நெய் சேர்த்து, படிப்படியாக தண்ணீர் சேர்த்து கலக்கவும். அந்த மாவை 5 நிமிடங்கள் பிசையவும்.
பின் மாவை பெரிய உருண்டைகளாக பிரித்து தனியாக வைக்கவும், ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவு உருண்டையை சிறிது தடிமனாக உருட்டி,வெங்காய கலவையை நடுவில் வைக்கவும், அதை மீண்டும் உருட்டவும்.
பின் தவாவை சூடாக்கி வெங்காய குல்சாவை சிறிது நெய் சேர்த்து இருபுறமும் வேகவிடவும்.
பழுப்பு நிறம் வரும் வரை வேக வைக்கவும். சுவையான வெங்காய குல்ச்சாவை சிறிது கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -