Thakkali Kadaiyal:இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ -சுவையான தக்காளி கடையல் செய்முறை!
பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுப்பில் கடாயை வைத்து, பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பை அனைத்து விட்டு, தக்காளி உள்ளிட்டவற்றை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை மத்து கொண்டு மைய கடைந்து கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் சுற்றி எடுத்துக் கொள்ளலாம்.
அரைத்து வைத்துள்ள தக்காளி கடையலை இதில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி விட வேண்டும் எண்ணெய் பிரிந்து கெட்டிப் பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான தக்காளி கடையல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -