அலர்ஜி முதல் செரிமானக் கோளாறு வரை: பப்பாளியை எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது?
பப்பாளியை எவ்வெப்போது சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதன் பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதற்கு முன், அதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்துஸ்தான் டைம்ஸில் ஊட்டச்சத்து நிபுணர் அபிலஷா வி கூறுவதாவது, பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளுடன், பல வகையான ஆன்டிஆக்ஸிட்கள் காணப்படுகின்றன.
2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பப்பாளி சாப்பிடுவது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பழுக்காத பப்பாளியை உண்பது ஜீரணத்தை மேம்படுத்தும். உங்கள் உடலையே ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும். இதில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் குடலில் உள்ள அமிலங்கள் சுரப்பை ஊக்கப்படுத்தி செரிமானத்தை உறுதி செய்யும்.
பப்பாளியை மருந்துடன் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அமெரிக்க தேசிய நூலகம் மேற்கோள் காட்டியதுபடி, பப்பாளி சில மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
பப்பாளியில் நார்ச்சத்து அதிகம். இது மலச்சிக்கல் பிரச்சனையை குண்ப்படுத்த உதவும். அதேவேளையில் அதிக அளவில் பப்பாளி உட்கொள்வது செரிமானத்தை கெடுக்கவும் செய்யும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -