Sulaimani Tea: புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர்..! எப்படி செய்வது?
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம். கட்டஞ்சாயா என்ற கடும் டீ தான் பரவலாக அருந்துகிறார்கள் என்றாலும் கூட மசாலாப் பொருட்களை சேர்த்து இனிப்பு புளிப்பு என்று தரப்படும் சுலைமானி டீ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும். பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும்.
பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.
திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -