Sulaimani Tea: புத்துணர்ச்சி தரும் கேரள ஸ்பெஷல் சுலைமானி தேநீர்..! எப்படி செய்வது?
கேரளாவில் இந்த வகை தேநீர் கொஞ்சம் அதிகம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு வாய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அதில் கிராம்பு, லவங்கப்பட்ட, புதினா இலைகள் மற்றும் ஏலக்காயை போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் சில நிமிடங்களில் எலும்பிச்சை சாற்றை ஊற்றவும்.
பின்னர் கடைசியாக தேயிலைகளைப் போடவும். அடுப்பை அனைத்துவிடவும். 3 முதல் 4 நிமிடங்களுக்கு பாத்திரத்தில் மூடி போட்டு வைத்துவிடவும். பின்னர் வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் சேர்த்து மேலே புதினா இலைகள் போட்டு பருகவும்.
வரலாற்றில் இதை அரபு உலகில் அந்தக் காலத்தில் பருகிவந்தனர். இதற்கு இணையான காவா எனும் பானத்தை இறைத்தூதரே பருகினார் என்றும் கூறப்படுகிறது.
காவாவில் பேரீச்சம்பழமும், மிளகுத்தூளும் சேர்ப்பார்கள். அரேபியர்கள் முதலில் கவா என்ற பானத்தைத் தான் பருகிவந்தனர் என்றும் அதன் பின்னரே அதில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி சுலைமானி தேநீரைப் பருகினர் என்றும் கூறப்படுகிறது.
அரபு மொழியில் சுலைமானி தேநீர் என்றால் அமைதியின் மனிதர் என்று அர்த்தம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -