Semiya custard recipe : போரான ஸ்விட்ஸ் செய்ததெல்லாம் போதும்..இதோ இந்த சேமியா கஸ்டர்டு செய்து பாருங்கள்!
உப்மா, பாயசம் என்று சேமியா சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இதோ இந்த புதிய வகை சேமியா ரெசிபியான சேமியா கஸ்டர்டை செய்து அசத்துங்கள்..
தேவையான பொருட்கள் : நெய், சேமியா - 1/2 கப், தண்ணீர் - 1 கப், பால் - 1 கப், கஸ்டடு பவுடர், - 4 தேக்கரண்டி, சர்க்கரை - 2 மேசைக்கரண்டி, ஸ்ட்ராபெரி ஜாம், மாதுளை பழம்.
முதலில் ஒரு பேனில் சிறுது நெய் ஊற்றி சேமியா, பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பவுலில் 2 ஸ்பூன் பாலில் 4 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த சேமியாவை அதனுள் போட்டு கொதிக்கவிடவும். சிறுது நேரம் கழித்து பால், சர்க்கரை மற்றும் கஸ்டர்டு கலவை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின், ஒரு க்ளாசில் ஸ்ட்ராபெரி ஜாம் தடவி, அதனுள் சேமியா கஸ்டர்டு ஊற்றி மாதுளை பழத்தால் டாப்பிங் செய்து கொள்ளவும். இறுதியாக 2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால், சேமியா க்ஸ்டர்டு தயார்.