Bread Omelette Recipe : ப்ரெட் ஆம்லேட் சுவையாக இருக்க இந்த சட்டினியை அதில் சேர்த்து பாருங்க!
சான்விச் சட்னி செய்ய தேவையான பொருட்கள் : பூண்டு - 3 பற்கள், இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3, பொட்டு கடலை - 1 மேசைக்கரண்டி, சர்க்கரை - 1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை - 1 கப், புதினா இலை - 1 கப், எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம், தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுட்டை கலவை செய்ய தேவையான பொருட்கள் : வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, முட்டை - 4, உப்பு - 1 சிட்டிகை, மிளகு தூள் - 1 சிட்டிகை
ப்ரெட் ஆம்லெட் தேவையான பொருட்கள் : வெண்ணெய், முட்டை கலவை, பிரட் துண்டுகள், சான்விச் சட்னி
செய்முறை: சான்விச் சட்னி செய்ய மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டு கடலை, சர்க்கரை, உப்பு, சீரகம், கொத்தமல்லி இலை, புதினா இலை, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
முட்டை கலவை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மற்றோரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு அடித்த முட்டையை கலந்து வைத்த வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ப்ரெட் ஆம்லெட் செய்ய ஒரு பானில் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் முட்டை கலவையை ஊற்றவும். சிறிது நேரம் கழித்து இரண்டு பிரட் துண்டுகளை வைக்கவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். பிறகு திருப்பி விட்டு நன்கு பக்கமும் உள்ள முட்டையை பிரட்டின் மீது மடித்து விடவும். அவ்வளவுதான் சுவையான பிரட் ஆம்லெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -