Spicy Oats Pancake: சுவையான காலை உணவு - ஓட்ஸ் Pancake ரெசிபி!
ஓட்ஸை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, முட்டை சீரக தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் பொடி, உப்புஅனைத்தையும் போட்டு ஒன்றாக கலக்கவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதோடு தேவையான அளவு பால் அல்லது தயர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் வைத்து தோசைக் கல் சூடானதும் மாவில் சிறதளவை எடுத்து தடிமனான தோசை போல ஊற்ற வேண்டும்.
வெண்ணெய் / நெய் சேர்த்து கொள்ளலாம். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம். ஓட்ஸ் Pancake ரெடி.
ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் ஸ்மூத்தி அதோடு போலவே ஓட்ஸ் Pancake ருசியாக இருக்கும்.
இதையே இனிப்பாக வேண்டுமென்றால் ஓட்ஸ், முட்டை, தேன், வாழைப்பழம், பால் சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி எடுத்தால் ஸ்வீட் ஓட்ஸ் Pancake ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -