Sukka Recipe: 5 ரூபாயில ஈரல் சுக்கா செய்ய முடியுமா? ரெசிபி இதோ!
யாருக்குத்தான் ஈரல் சுக்கா பிடிக்காமல் போகும். ஆனால், முட்டையில் சுவையான சுக்கா செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் ஐந்து முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய், மிளகு தூள் கரம் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் இந்தக் கலவையை ஊற்றி நீராவியில் வேக வைக்கவும்.
முட்டை நன்றாக வெந்ததும், அதை துண்டுகளாக நறுக்கவும்.
மிதமான தீயில் ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சிறிதளவு தயிர் சேர்த்து கிளறவும். இதோடு வேக வைத்து நறுக்கிய முட்டை துண்டுகளை சேர்த்து கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான முட்டை சுக்கா ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -