சோயா கிச்சடி செய்வது எப்படி? ஈஸியான காலை ரெசிபி டிப்ஸ் இதோ!
பிரவுன் ரைஸ் பயன்படுத்தி செய்தால் சர்க்கரை வியாதி கொண்டோருக்கு கூடுதல் நன்மை பயக்கும் சோயா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கோப்பை சோயா பீன்ஸ் (ஊற வைத்தது), அரை கப் அரிசி, (ஊறவைத்தது) ,2 பச்சை மிளகாய்கள் 2 தாக்காளிப் பழங்கள் ,1 பெரிய வெங்காயம் ,
1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு துருவியது 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1 டீஸ்பூன் ஜீரகம் அரை கப் பொடிதாக நறுக்கிய மல்லி இலை அரை கப் யோகர்ட் கால் கப் பச்சை பட்டானி
ஒரு அடி அகலமான கனமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் அரிசி, சோயா பீன்ஸ், அரிசி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்க்கவும். இப்போது சோயா பீன்ஸ், அரிசி எல்லாம் நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். அதில் சீரகம் சேர்த்து பொரியவிடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் யோகர்ட் சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பும் வேகவைத்த பட்டானியையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் 10 நிமிடங்கள் சேர்த்து சமைக்கவும்.
சோயா கிச்சடி ரெடி. இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், அப்பளம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -